Tuesday, August 31, 2010

இளையராஜா vs ஏ.ஆர்.ரஹ்மான் - 2




அடுத்தது நாம் பார்க்கப் போவதும் கிட்டத்தட்ட ஒரே சிடுவேஷன் தான். ஒன்றில் திருமணம் ஆகியும் கணவனுடன் சேராதிருப்பவள் மனதில் அரும்பும் காதுலும் அவள் உணர்வுகளையும் சொல்லும் பாடல். இன்னொன்று , திருமணம் செய்யப்போகும் பெண் கணவனை எதிர்நோக்கும் பாடல். இரண்டிலுமே கணவனுடன் சேரத் துடிக்கின்ற காதல் வெளிப்படவேண்டும். முதலில் சொன்னது, மௌன ராகம் படத்தில் இடம்பெறும் "சின்ன சின்ன வண்ணக்குயில்" என்ற பாடல். அடுத்து சொன்னது உயிரே படத்தில் இடம்பெறும் "நெஞ்சினிலே என்ற பாடல். 



இரண்டையுமே பாடியிருப்பது ஜானகி. ஒரு இசையமைப்பாளனின் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வருவது இயக்குனர்தான் என்று சொல்லுபவர்கள் உண்டு. அந்த வகையில் இரண்டு படங்களையுமே இயக்கியது மணிரத்னம் தான். ஆக இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் ஒப்பிட இது நல்ல பொருத்தமான களம்தான். 




காதலும் ஏக்கமும் கலந்த விரகம் தொனிக்கும் இனிமையான பாடல்கள் தான் இரண்டுமே! மனதின் மென்மையான உணர்வுகளை, பெண்மையின் தவிப்பை இரண்டு இசை மேதகளுமே எவ்வளவு அழகாக தங்கள் இசையில் அடக்கி விட்டார்கள். "சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி " என ஜானகியின் இனிமையான குரல் கொஞ்சத் தொடங்கும்போதே மனசு உருக ஆரம்பித்து விடுகிறது. நெஞ்சினிலேயோ ஐஸ்க்ரீம் ரகம். ஆனாலும் பின்னணி இசையையும் சேர்த்துப் பார்த்தால், சின்ன சின்ன வண்ணக்குயில் நம்மை கொஞ்ச்சம் கூடுதலாய் மயக்குகிறது. 




சரணங்களைப் பொறுத்தவரையில் "மன்னவன் பாடலொன்று" என்று ஜானகி மென்மையாய் சுதியேற்றும்போதும் சரி அந்த கோரஸ் ஹம்மிங்கும் சரி ஒரு இனிய விரக உச்சத்தையே தொட்டு விடுகிறது. "கூரைச்சேலை " என்று கொஞ்ச, சிட்டுவேஷனுக்குத் தகுந்தவாறு ரஹ்மான் கேரள இசையில் கலக்க ... நெஞ்சினிலே நிச்சயம் நெஞ்சில் இடம் பிடிக்கிறது. ஆனாலும் கூட ... ட்யூனாகட்டும் பிண்ணனி இசையாகட்டும்.. ராஜா ஒரு படி மேலே போய் சின்ன சின்ன வண்ணக்குயில் மூலம் நம் மனதில் சின்னதாய் ஒரு சிம்மாசனமே கட்டி அமர்ந்து கொள்கிறார்.

 முந்தைய இளையராஜா vs ஏ.ஆர்.ரஹ்மான்

5 comments:

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

ஷஹி said...

பாடல்கள் இனியன,கட்டுரை அதனினும்...

Madeshwaran said...

Very Good Comparison, But Still Illayaraja had won the contest many years ago with AR..

Abhi said...

வருகை தந்து விமர்சித்ததற்கு நன்றி நண்பர்களே!

Anonymous said...

Manasila irunthu sollunga.. chinna chinna vanna kuyil songa 5 tharam nenjile 5 tharam kettu parunga...

Ungalala chinna chinna song 3 thadavaiku mela kekka mudiyathu...

Ilayaraja arr-a vida best than... ana ilayaraja fans thevaiyilla arr-a kurai solrathe polappu... arr fans apadi solrathe illa.. epadiyo ithu sirantha oppeedu than.